Enable Javscript for better performance
மதுரைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    மதுரைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

      விழாவுக்கு கல்லூரி வாரியக் குழுத் தலைவர் டி.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கே.எம்.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மனித வள ஆலோசகர் என்.ஏ.என்.நாராயணன் மற்றவர்களை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலும், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் வழிகாட்டி என்ற தலைப்பிலும் பேசினர்.

      வாரியக் குழு செயலர் எஸ்.நடனகோபால், பொருளாளர் என்.ஆனந்த் சீனிவாசன், உறுப்பினர்கள் எஸ்.ஆர்.எஸ்.சங்கரன், இல.அமுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் கே.முத்துவேல் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai