Enable Javscript for better performance
ரயில் மோதி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தில் ரயில் மோதி முன்னாள் ராணுவ வீரரின் மனைவி சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.

     திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் காளிப்பன் (51). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி லெட்சுமி (40). இவர் மதுரைக்கு செல்வதற்காக சனிக்கிழமை திருப்பரங்குன்றத்திலிருந்து வெயில் உகந்த அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து வந்தாராம். அப்போது தண்டவாளத்தைக் கடந்த போது சனிக்கிழமை பகல் 12 மணியளவில் மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

     இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai