Enable Javscript for better performance
வ.உ.சி. பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வ.உ.சி. பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

    By வாடிப்பட்டி  |   Published on : 06th September 2015 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வ.உ.சிதம்பரனார் 144ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, சோழவந்தானில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

     வெள்ளாளர் உறவின்முறைச் சங்கத் தலைவர் தங்கராஜ் ராஜ்குமார், தொழிலதிபர் ஸ்ரீராமுலு, முன்னாள் தலைவர் எம்.கே.முருகேசன், பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள் ராமு, முன்னாள் கவுன்சிலர் ராஜசேகரன், ஜெயராமன் ஆகியோர் சோழவந்தானில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, இரும்பாடி, கருப்பட்டி, பாலகிருஷ்ணபுரம், நாச்சிகுளம், தேனூர், சி.புதூர், சித்தாலங்குடி, தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால் ஆகிய கிராமங்களில் இருந்து வெள்ளாளர் உறவின்முறையினர் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

     காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் முத்துப்பாண்டி, செயலர் பரமசிவம், வட்டாரத் தலைவர் ராமன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதே போல் பேரூராட்சி  உதவித் தலைவர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai