Enable Javscript for better performance
ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட சிவனடியார்கள் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட சிவனடியார்கள் முடிவு

    By மதுரை,  |   Published on : 07th September 2015 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் தொடர்புடைய ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பட்டியலை வெளியிட உள்ளதாக அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது,

    இக்கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் தெப்பக்குளம் அருகேயுள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,சென்னை திருத்தொண்டர் சபையின் நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன், கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், செயலர் கோ.சரவணக்குமார், மதுரை மாவட்ட அமைப்பாளர் அர்ஜூனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சிவனடியார்கள் மற்றும் திருக்கோயில் நலன்கள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்ட முடிவில், திருத்தொண்டர் சபை நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் கூறியது: தமிழக அளவில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன.

    இவற்றை மீட்க மாவட்டந்தோறும் ஆய்வுகள் நடத்தி வருகிறோம். விரைவில் மதுரையில் திருக்கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதுவரையில் 12 ஊர்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 20ஆயிரம் ஏக்கர் திருக்கோயில் நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உதவியுடன் மீட்டு திருக்கோயில் வசம் ஒப்படைத்துள்ளோம்.

    திருக்கோயில்களின் நில ஆக்கிமிப்புக்கு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர்களும் அடக்கம். மேலும் தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டிலும் திருக்கோயில் நிலங்கள் இருக்கின்றன. வரும் நவம்பரில் சென்னையில் 50ஆயிரம் சிவனடியார்கள் கூடி ஆலோசனை நடத்த உள்ளோம்.

    அப்போது இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள 10 ஊழல் அதிகாரிகள், ஆலய சொத்துக்களை அபகரித்துள்ள 10 அரசியல்வாதிகள், 1000 கோடி மதிப்பிலான ஆலய சொத்துகளை ஆக்கிரமித்து வைத்துள்ள 10 செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்றார். சிவனடியார்கள் மாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai