Enable Javscript for better performance
காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 07th September 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் கீழத்தெரு நடுச்சந்துப் பகுதி பெண்கள் குடிநீர் கேட்டு ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மதுரை மாநகராட்சி 96 ஆவது வார்டு கீழத்தெரு நடுச்சந்துப் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் வரவில்லையாம். இதையடுத்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் கீழரத வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாமன்ற உறுப்பினர் ஹமிதாபேகம் அக்பர்அலி மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.

    மேலும் இப்பகுதியில் விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai