Enable Javscript for better performance
கிரானைட் முறைகேடு விசாரணை குழுவினருக்கு கூடுதல் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிரானைட் முறைகேடு விசாரணை குழுவினருக்கு கூடுதல் பாதுகாப்பு

    By மதுரை,  |   Published on : 07th September 2015 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ள குழுவினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் விசாரணைக் குழு அலுவலகம் உள்ளது. ஏற்கெனவே குழுவினருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே வணிக வளாகத்துக்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சட்ட ஆணையர் அலுவலகத்துக்கு மிரட்டல் வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமை திடீரென வணிக வளாகம் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டன.

    இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவிடம் கேட்டபோது, ஏற்கெனவே விசாரணைக் குழுவினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்த தகவல் குறித்தும் விசாரித்துவருகிறோம் என்றார்.

    மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு: சட்ட விரோத கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரித்துவரும் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலூர் நீதித்துறை மன்றத்துக்கு தீ வைக்கப் போவதாக மிரட்டல் வந்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai