Enable Javscript for better performance
குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக பெண்கள் செல்ல வேண்டாம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக பெண்கள் செல்ல வேண்டாம்: ஆட்சியர்

    By மதுரை,  |   Published on : 07th September 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காகப் பெண்கள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகம், கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பெண்கள் குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்து வருகின்றனர். அங்கு முறையான ஊதியம் வழங்காதது, குடும்பம் மற்றும் சொந்த காரணங்களுக்காகத் தாய்நாடு திரும்ப இயலாதது, வேலை நேரம் குறித்து தெளிவற்ற நிலை இருப்பதால் ஏற்படும் வேலைப்பளு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் பாதிப்பு, வீட்டுவேலை செய்யும் பெண்களின் குறைகளைக் களைய முறையான சட்டம் இயற்றப்படாத நிலை போன்ற இன்னல்களைச் சந்திப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த காரணங்களால் இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்கும் வகையில், குவைத் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டுக்கான வேலை வழங்கும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் பல்வேறு வழிகளில் பெண்கள் குவைத் நாட்டுக்கு வருவதும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    குவைத் நாட்டில் வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால், அங்கு பணிக்குச் செல்லும் பெண்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் பெண்கள் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai