Enable Javscript for better performance
தெய்வநெறிக்கழகம்: சிந்தனை மன்றம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை தெய்வநெறிக் கழகத்தின் திரிவேணி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை சிந்தனை மன்றம் நடைபெற்றது.

    அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தெய்வநெறிக்கழகத் தலைவர் சுவாமி சிவானந்தசுந்தரானந்தா தலைமை வகித்தார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் முத்தையா நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். பக்தி மார்க்கத்தை கேட்டபிறகும் போட்டி, பொறாமை பெருகக் காரணம்-பொருள் தேடலே, புகழ் தேடலே எனும் தலைப்பிலான சிந்தனை மன்றம் நடைபெற்றது. பேராசிரியர் சாலமன்பாப்பையா நடுவர் பொறுப்பேற்றார். பொருள் தேடலே எனும் பொருளில் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், எஸ்.ராஜாவும், புகழ் தேடலே எனும் பொருளில் பேராசிரியை ரேவதிசுப்புலட்சுமி, ஆர்.ராஜ்குமாரும் பேசினர். புலவர் கி.வேலாயுதனார் நன்றி கூறினார்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை சிம்மக்கல் சாரதா வித்யாவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் பங்கேற்ற மீனாட்சி அவதாரமும், திருக்கல்யாணமும் என்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai