Enable Javscript for better performance
நெடுஞ்சாலை உதவிப் பொறியாளர் பணி எழுத்துத் தேர்வு: 3072 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நெடுஞ்சாலை உதவிப் பொறியாளர் பணி எழுத்துத் தேர்வு: 3072 பேர் பங்கேற்பு

    By மதுரை  |   Published on : 07th September 2015 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை மதுரை மையத்தில் 3 ஆயிரத்து 72 பேர் எழுதினர்.

    நெடுஞ்சாலைத் துறையில் காலியாக இருக்கும் 213 உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, தமிழகம் முழுவதும் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) நடைபெற்றது. காலையில் பொறியியல், மாலையில் பொது என இரு பாடப் பிரிவுகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

    மதுரை மையத்தில் 3708 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, வக்ஃபு வாரியக் கல்லூரி, செளராஷ்டிரா பள்ளி உள்பட 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இருவேளையிலும் 3072 பேர் தேர்வு எழுதினர். 636 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்கள் கண்காணிப்புக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி தலைமையில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் எஸ்.பன்னீர்செல்வம், பி.பெருமாள்சாமி ஆகியோர் அனைத்து தேர்வு மையங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai