Enable Javscript for better performance
மூக்கையாத்தேவர் 36ஆவது நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய பார்வர்டு பிளாக் முன்னாள் தலைவர் மறைந்த பி.கே.மூக்கையாத் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மிக நெருக்கமாகவும், அகில இந்தியப் பார்வர்டு பிளாக் மாநிலத் தலைவராகவும் இருந்தவர் பி.கே.மூக்கையாத் தேவர். அவரது 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மேயர் ராஜன்செல்லப்பா, மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலை அணிவித்தனர்.

    திமுக சார்பில் மாநகர் தெற்கு மாவட்டச் செயலர் கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு ஆகியோர் மாலை அணிவித்தனர். மு.க.அழகிரி ஆதரவாளர்கள் முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் தலைமையில் மாலை அணிவித்தனர்.மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் மாநில இணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்டச் செயலர் சண்முகசுந்தரம், சிவகுமார் ஆகியோர் மாலை அணிவித்தனர். அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் தலைமையிலும், நடிகர் கருணாஸ் உள்ளிட்டோரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai