Enable Javscript for better performance
அனுமதியின்றி குவாரியில் கல் திருடிய லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி குவாரியில் கல் திருடிய லாரி பறிமுதல்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 08th September 2015 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருங்குடி அருகே மூடப்பட்ட குவாரியில் அனுமதியின்றி கல் திருடிய லாரியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ராஜேந்திரனுக்கு நிலையூர் - பெருங்குடி அருகே உள்ள குவாரியில் கல் எடுப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சிவகாமிராஜா, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது குவாரியில் கல் திருடிய கும்பல் லாரியை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து லாரியைக் கைப்பற்றி திருநகர் போலீஸாரிடம் ஓப்படைத்தனர். இதுகுறித்து திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai