Enable Javscript for better performance
ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரண்மனைக்காரர் தெருவில் வசித்து வருபவர் ராஜ் மகன் செல்வக்குமார்(36). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா(30) மட்டப்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கடந்த 4ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுள்ளனர்.

    6ஆம் தேதி திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ.12ஆயிரம், 3 பவுன் தங்கவளையல், 2 வெள்ளிக் கொலுசு, குத்துவிளக்கு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.  இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai