Enable Javscript for better performance
கருணாநிதியின் தாய், தந்தை சிலை விவகாரம்: அரசை அணுக உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கருணாநிதியின் தாய், தந்தை சிலை விவகாரம்: அரசை அணுக உத்தரவு

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக தலைவர் கருணாநிதியின் தாய், தந்தை சிலைகளை அகற்றுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உரிய அதிகாரியை அணுகிப் பரிகாரம் பெற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

     நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த சேவியர் என்ற கவிஞர் மோசை தாக்கல் செய்த மனு: ராதாபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள் ஆகியோரின் சிலைகள் 2009 இல் திறக்கப்பட்டன. இந்த சிலைகளை அமைக்க ராதாபுரம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த சிலைகளை அகற்றுவதற்கு ராதாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ரத்து செய்து, சிலைகளை அகற்றத் தடை விதிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார். இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளை அணுகாமல் நேரடியாக நீதிமன்றத்தை அணுகியுள்ளார். எனவே மனுதாரர் உரிய அதிகாரிகளிடம் மனு அளித்துப் பரிகாரம் பெற வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai