Enable Javscript for better performance
கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    கிரிக்கெட் வாரியத்தை அரசு ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

     புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த பிரவீன்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், விஎம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 

     மனுவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ், விளையாடும் போது தலையில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் உயிரிழந்தார். இது போல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 4 வீரர்கள் இறந்துள்ளனர். எனவே கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரையில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி விளையாடத் தடை விதிக்க வேண்டும். அதுவரையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசே ஏற்று நடத்த உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார். 

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிக்கெட் வீரர்களுக்கு தலையில் அடிபடாமல் இருக்க பாதுகாப்பு அம்சம் கோருகிறீர்கள். ஆனால் சாதாரண மக்கள் பாதுகாப்பு கருதி தலையில் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றால் எதிர்த்து போராடுகிறீர்கள். இது விந்தையாக உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் செல்வந்தர்களாக உள்ளனர். சட்டத்தின் பயன் சாதாரண மக்களுக்கு கிடைக்க போராட வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai