Enable Javscript for better performance
குடிநீர், மடிக்கணினி, ரேஷன் கடை: கோரிக்கை மனுவுடன் குவிந்த மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர், மடிக்கணினி, ரேஷன் கடை: கோரிக்கை மனுவுடன் குவிந்த மக்கள்

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப்.7) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் குடிநீர், மடிக்கணினி, ரேஷன் கடை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

     வாடிப்பட்டி வட்டம் சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய போலீஸார், கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை, குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க அனுப்பினர்.

     பின்னர் கிராமத்தினர் கூறுகையில், எங்களது கிராமத்துக்குரிய நியாயவிலைக் கடை ஆண்டிபட்டி பங்களா பகுதியில் செயல்பட்டு வந்தது. ரேஷன் பொருள்களுடன் நான்குவழிச் சாலையை கடந்து செல்லும்போது, அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தன. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, எங்களது கிராமப் பகுதியிலேயே நியாய விலைக் கடை திறக்கப்பட்டது.

       ஆனால், ஒரு நாள் மட்டுமே பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. பின்னர் அந்த கடை மூடப்பட்டு, வழக்கம்போல பழைய கடையிலேயே பொருள்கள் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

      எங்களது கிராமத்தினருக்குப் பயன்பெறும் வகையில், புதிதாகத் திறக்கப்பட்ட நியாய விலைக் கடையைத் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

     மடிக்கணினி: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவியர் சிலர் விலையில்லா மடிக்கணினி கேட்டு மனு அளித்தனர். தங்களது பள்ளியில் சுயநிதிப் பாடப் பிரிவான கணினி அறிவியல் பிரிவினருக்கு மட்டும் விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லை என்றும், அதேநேரம் வேறு பள்ளிகளில் சுயநிதிப் பிரிவில் படிப்பவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

     காவிரி குடிநீர்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் சாக்கிலிப்பட்டி ஊராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கோரி, மனு அளித்தனர். ஊராட்சித் தலைவர் ராஜம்மாள் தலைமையில் வந்த அக் கிராமத்தினர், தங்களது கிராமத்தின் வழியாக கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய் சென்றபோதும், எங்களுக்கு குடிநீர் தரமறுக்கின்றனர் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai