Enable Javscript for better performance
குறைதீர் கூட்டம்: 357 மனுக்கள் பெறப்பட்டன- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 357 மனுக்கள் பெறப்பட்டன.

         மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பி.நிர்மலா தேவி, பிற்பட்டோர் நல அலுவலர் எஸ்.வைத்தியலிங்கம், ஆதிதிராவிடர் நல அலுவலர் எம்.முருகேஸ்வரி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

         இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர்  உதவி, விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, திருமண உதவி, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 357 மனுக்கள் பெறப்பட்டன.

      இவை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நடவடிக்கைக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

     பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு மொத்தம் ரூ.34,500 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 12 பேருக்கு மொத்தம் ரூ.54,348 மதிப்பிலான சலவைப் பெட்டி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai