Enable Javscript for better performance
சட்டம் சார்ந்த மருத்துவத்துறை புகாரை விசாரிப்பது அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    சட்டம் சார்ந்த மருத்துவத்துறை புகாரை விசாரிப்பது அவசியம்

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை மீதான புகார்கள் குறித்து சிறப்புக்குழு விசாரணை நடத்தவேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கோரியுள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் டாக்டர் கே.செந்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மருத்துவக் கல்லூரியில் உள்ள சட்டம் சார்ந்த மருத்துவத்துறை மூலமே அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால், துறையின் தலைமை பொறுப்பில் இருப்போர் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

     கடந்த 2013-இல் துறையின் தலைமை பேராசிரியர் இடமாற்ற வழக்கில் அரசு மனு மீதான விசாரணையை துரிதப்படுத்த அரசு வழக்குரைஞர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளோம்.  புகார்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை கோரி, வரும் 14-ஆம் தேதி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை டாக்டர்கள் பணியைப் புறக்கணிப்பர்.  சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைமைப் பொறுப்பில் இருப்போர் மீதான புகார்களை காவல்துறை உள்ளிட்ட உயர்நிலை சிறப்புக்குழு விசாரிப்பது அவசியம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai