Enable Javscript for better performance
சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்கும் இயந்திரம்: கண்டுபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்கும் இயந்திரம்: கண்டுபிடிப்பு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 08th September 2015 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயப்பட்டறையிலிருந்து வெளியாகும் கழிவுநீரை சுற்றுச்சுழல் பாதிக்காதவாறு நன்னீராக மாற்றும் இயந்திரத்தை மதுரையைச் சேர்ந்த ஒய்.ஜாகீர்உசேன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

    அந்த இயந்திரத்தின் அறிமுகவிழா அவனியாபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இயந்திரம் குறித்து ஒய்.ஜாகீர்உசேன் செய்தியாளர்களிடம் கூறியது:

    தமிழகம் மட்டுமல்லாது இந்தியாமுழுவதும் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேரும் கழிவுநீரை என்ன செய்வது எனத்தெரியாமல் சேமித்து வைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

    இதனைப்போக்க முன்னாள் சாயப்பட்டறைத் தொழிலாளி என்ற முறையில் நான் சாயக்கழிவுகளை நன்னீராக்கும் இயந்திரம் கண்டுபிடிக்க முடிவுசெய்தேன். எனது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசின் விஞ்ஞான கழகத்தில் நிதிஉதவி கேட்டேன். அவர்கள் எனது அறிக்கையைப் பார்த்து ரூ.14 லட்சம் நிதிஉதவி அளித்தனர்.

     இதையடுத்து தற்போது இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன். இதன்மூலம் 5 ஆயிரம் லிட்டர் முதல் 20 ஆயிரம் லிட்டர் வரை சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்கமுடியும். சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் சாயப்பட்டறைகளுக்கே பயன்படுத்தலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் பெங்களூர் மத்திய விஞ்ஞானக் கழக விஞ்ஞானி ஹிப்ரகி பேசியது:

    மதுரையைச் சேர்ந்த ஒய்.ஜாகீர் உசேன் கண்டறிந்த இந்த இயந்திரத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த இயந்திரம் மூலம் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் உள்ளிட்டவை மாசுபடுவது தடுக்கப்படும். ஆனால் இந்த இயந்திரம் மிகக் குறைந்த விலையில் மானியம் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்துவருகிறோம் என்றார்.

    நிகழ்ச்சியில் மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலெட்சுமி, திருச்சி, என்.ஐ.டி பேராசிரியர் செல்வராஜ் ஆகியோர் இயந்திரத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்தனர். பல்லடம், காஞ்சிபுரம், கரூர், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சாயப்பட்டரை தொழில்செய்வோர் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai