Enable Javscript for better performance
புதிய கட்டடங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தில் புதிய மருத்துவமனை கட்டடங்கள், விடுதிக் கட்டடங்களை தமிழக முதல்வர்  ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

    கள்ளிக்குடியில் ரூ.81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம், வில்லூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள செவிலியர் விடுதி கட்டடம், டி.புதுப்பட்டியில் ரூ.13.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட செவிலியர் விடுதி கட்டிடம், திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்தவக் கல்லூரியில் ரூ.1.70 கோடி மதிப்பில் 25 அறைகள் கொண்ட மாணவர் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அரசு  ஹோமி யோபதி மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.புவனேஸ்வரி, துணை முதல்வர் பி.ராதாமணி, அ.தி.மு.க.மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் தமிழ்

    செல்வம் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai