Enable Javscript for better performance
பெரிய வெங்காயம் விலை குறைகிறது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை சந்தையில் பெரியவெங்காயம் விலை ரூ.45ஆக குறைந்துள்ளது.

    கடந்த சில நாள்களுக்கு முன் பெரிய வெங்காயம் கிலோ ரூ.70 வரையில் உயர்ந்து காணப்பட்டது. உள்ளூர் பகுதிகளில் பெரிய வெங்காயம் உற்பத்தி இல்லாத நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து இருந்தது. அங்கும் மழை காரணமாக உற்பத்தி சரிவு ஏற்பட்டதால் வெங்காயம் கடுமையாக விலை உயர்ந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெரிய வெங்காயம் விலை ரூ.45 முதல் ரூ.50ஆக குறைந்தது. இதே போன்று கடந்த சிலநாள்களாக தக்காளி விலை மிகவும் குறைவாக (கிலோ ரூ.7)உள்ளது. கேரட் விலை கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது.

    தக்காளி விலை குறைவால் தேனி பகுதி விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது தக்காளி 15 கிலோ பெட்டி விலை வெறும் ரூ.50ஆக உள்ளது. மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.7ஆகவும் சில்லறை விலையில் ரூ.10ஆகவும் உள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai