Enable Javscript for better performance
பேரிடர் மேலாண்மைத் திட்டம்: வருவாய்த் துறை அலுவலர்கள் வாகனங்களில் வயர்லெஸ் கருவி- Dinamani

சுடச்சுட

    

    பேரிடர் மேலாண்மைத் திட்டம்: வருவாய்த் துறை அலுவலர்கள் வாகனங்களில் வயர்லெஸ் கருவி

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலர்களின் வாகனங்களில் வயர்லெஸ் கருவி பொருத்தப்படுகிறது.

     புயல், சுனாமி, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் பேரிடர் தடுப்பு, மேலாண்மை, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசால் வருவாய் நிர்வாகத்துறையின்கீழ் பேரிடர் தணிக்கும் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத் துறையின்கீழ் மாநில அளவிலான குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு, கோட்ட அளவிலான குழு, வட்ட அளவிலான குழு, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

     மாவட்ட அளவிலான குழுக்களில் அனைத்து வருவாய்த் துறை அலுவலர்கள், உள்ளாட்சிகளின் அலுவலர்கள், காவல், தீயணைப்பு, பொதுப்பணி, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறையினர் இடம் பெற்றுள்ளனர். பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தகவல் தொடர்பு மிகவும் அவசியமானது என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இலவச தொலைபேசி எண்ணுடன், 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

     பேரிடர் நிகழ்வுகளின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இருக்கும் அலுவலர்கள் தங்களது உயர் அலுவலர்கள் அல்லது கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் வருவாய்த் துறையினரின் ஜீப்-களில் வயர்லெஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கோட்டாட்சியர்கள், வருவாய்த் துறையில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் என 60-க்கும் மேற்பட்டோரது ஜீப்களில் வயர்லெஸ் கருவிகள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai