Enable Javscript for better performance
போலீஸாருக்கு 2 நாள்களில் பிரேதப் பரிசோதனை அறிக்கை: பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸாருக்கு 2 நாள்களில் பிரேதப் பரிசோதனை அறிக்கை: பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரேத பரிசோதனை அறிக்கையை போலீஸாருக்கு 2 நாள்களில் வழங்கக்கோரும் மனுவை சுகாதாரத்துறை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

     மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்குரைஞர் எம்.சரவணன் இம்மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.

    மனுவில், அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்காமல் தாமதிக்கின்றனர். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்படுகிறது.

    மேலும் மருத்துவ விதிகளின் படி மருத்துவர்கள் பிரேதபரிசோதனை செய்வதில்லை. இதனால் பல வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே விதிகளுக்கு உள்பட்டு பிரேத பரிசோதனை நடத்தவும், பிரேத பரிசோதனை அறிக்கையை காவல்துறை அதிகாரிகளுக்கு 2 நாள்களில் வழங்கவும் கோரி அனைத்து அரசு மருத்துவமனை டீன்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 2014 செப்.25 இல் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே,மருத்துவ விதிகளின்படி பிரேத பரிசோதனை நடத்தவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை 2 நாள்களில் போலீஸாரிடம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai