Enable Javscript for better performance
போலீஸ் எனக் கூறி மூதாட்டிகளிடம் 12 பவுன் நகைகள் பறித்த கும்பல்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் எனக் கூறி மூதாட்டிகளிடம் 12 பவுன் நகைகள் பறித்த கும்பல்

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் போலீஸ் எனக் கூறி மூதாட்டிகளிடம் திங்கள்கிழமை 12 பவுன் தங்க நகைகளைப் பறித்த மர்மக்கும்பலைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

     மதுரை மதிச்சியம் காந்திநகர் ஜவஹர் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி தனலெட்சுமி (58). இவர் வைகைக் கரை சாலையில் உள்ள தியேட்டர் அருகே நடந்துவந்தார். அப்போது அங்கிருந்த 3 பேர்  தங்களைப் போலீஸார் எனக் கூறியபடியே, இப்பகுதியில் திருட்டு அதிகமுள்ளது. ஆகவே நகையைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவும் எனக் கூறியுள்ளனர்.

     மேலும், தனலெட்சுமியிடம் ஒரு பையைக் கொடுத்து அதில் அவர் அணிந்திருக்கும் நகையை கழற்றி பத்திரமாக வைக்குமாறு கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய தனலெட்சுமி தனது ஆறரைப்பவுன் நகையைக் கழற்றி பையில் போடுமாறு மர்மநபர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் பையில் நகையை வைத்தது போல சுருட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

     வீட்டுக்கு வந்து தனலெட்சுமி பையை பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதையடுத்து மதிச்சியம் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

    மற்றொரு சம்பவம்: ஆரப்பாளையம் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சரஸ்வதி (65). இவர் மாநகராட்சிப் பள்ளி அருகே நடந்துவந்தபோது அங்கிருந்த 2 பேர் தங்களைப் போலீஸார் என கூறியபடியே நகையை பத்திரமாக வைக்குமாறு கூறியுள்ளனர்.

     மர்மநபர் கூறியதை நம்பிய சரஸ்வதி, ஐந்தரைப் பவுன் நகைகளைக் கழற்றி கொடுத்துள்ளார். அதை மர்மநபர்கள் தாளில் மடித்து தந்துவிட்டுச் சென்றனர். வீடு வந்து சரஸ்வதி பார்த்தபோது தாளில் நகைகள் இல்லை. இதுகுறித்து கரிமேடு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

     மதுரை நகரில் திங்கள்கிழமை பகலில் அடுத்தடுத்து 2 மூதாட்டிகளிடம் நூதனமுறையில் மர்மநபர்கள் நகையைப் பறித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai