Enable Javscript for better performance
மதுரை இலக்கிய மன்றம் சார்பில் 3 பேருக்கு நன்னெறி ஆசிரியர் விருது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை இலக்கிய மன்றம் சார்பில் 3 பேருக்கு நன்னெறி ஆசிரியர் விருது

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை இலக்கிய மன்றம் சார்பில் 3 பேருக்கு நன்னெறி ஆசிரியர் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

     ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மதுரை இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் ச.அவனிமாடசாமி தலைமை வகித்தார்.

    இதில் உதவி கல்வி அலுவலர் (மதுரை கிழக்கு) ஏ.ஜான் கென்னடி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.மல்லிகா, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரா.அன்புதேவி ஆகியோருக்கு நன்னெறி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

     தொழிலதிபர் பா.பெனிட்கரன் வரவேற்றார். மதுரை இலக்கிய மன்ற காப்பாளர் மு.சோமன், தலைவர் ஈ.அய்யம்பெருமாள், மன்ற ஆலோசகர் எம்.ஏ.ஜாபர் உசேன் மீரா, நிர்வாகிகள் மா.மணிகண்டபிரபு, ச.சிவக்குமார், மு.முருகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai