Enable Javscript for better performance
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி த.மா.கா.வினர் கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி த.மா.கா.வினர் கையெழுத்து இயக்கம்

    By திருமங்கலம்  |   Published on : 08th September 2015 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திருமங்கலம் தேவர் சிலை அருகே த.மா.கா.வினர் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கினர்.

    கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் பேசியதாவது. த.மா.கா. ஆரம்பித்து தற்போது 10 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் மக்களின் பிரச்னைகளுக்கு போராடுவதன் மூலம் மக்களின் மனதில் இடம்பெற்றுள்ளது.

    மதுவிலக்கு குறித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

      அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மதுவிலக்கை அமல்படுத்தும் வரை த.மா.கா.வின் போராட்டம் தொடரும். தமிழகத்தில் மொத்தம் 1 கோடி பேர்களிடமும், திருமங்கலம் தொகுதியில் 1 லட்சம் பேரிடமும் கையழுத்து பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

    கையெழுத்து இயக்கத்தில் தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் ஜெ.கே.குருசாமி, திருமங்கலம் நகர் தலைவர் எம்.துரைப்பாண்டி உட்பட 90 பேர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai