Enable Javscript for better performance
மருத்துவப் பணியாளர் பணி: பதிவுமூப்பை இன்று சரிபார்க்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவப் பணியாளர் பணி: பதிவுமூப்பை இன்று சரிபார்க்கலாம்

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆடியோமெட்ரீசியன், எலக்ட்ரோ என்செப்லோகிராபிக் டெக்னீஷியன் மற்றும் இஎம்ஜி டெக்னீஷியன் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் வெ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    இந்த பணியிடங்களுக்கு மேல்நிலைக் கல்வியில் அறிவியல் பாடத்துடன் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய மருத்துவக் கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஓராண்டு அனுபவ சான்று பெற்றிருக்க வேண்டும்.

    1.7.2015 தேதிப் படி ஓசி பிரிவினருக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 3.9.2015 வரை பதிவு செய்துள்ள அனைத்து வகுப்பைச் சார்ந்த அனைத்து முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற பிரிவைச் சார்ந்த பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

    எனவே, மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் நேரில் வருகை புரிந்து தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட உள்ள விவரத்தை செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று சரிபார்த்துக் கொள்ளுமாறும், பதிவுமூப்புக்கு பின்னர் உள்ள மனுதாரர்களின் விசாரணைகள் மற்றும் மேற்குறித்த தேதிக்கு பின்னர் பெறப்படும் முறையீடுகள் ஏற்றக் கொள்ளப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai