Enable Javscript for better performance
மருத்துவ மாணவியிடம் 2 பவுன் நகை வழிப்பறி- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவியிடம் 2 பவுன் நகையை வழிப்பறி செய்த மர்மநபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

     நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலா (22). இவர் எம்.பி.பி.எஸ். மாணவி. உறைவிட மருத்துவராக மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்து விடுதிக்கு பனகல் சாலையில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரில் ஒருவர் திடீரென மாணவி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.

    உடனே மாணவி சங்கிலியை கையால் பிடித்துக் கொண்டார். ஆனாலும், மர்மநபர் கையில் இரண்டே முக்கால் பவுன் சங்கிலி சென்றது. மதிச்சியம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.  குற்றங்களைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் வாகனச் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில், இச்சம்பவம் நடந்ததுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai