Enable Javscript for better performance
மறியல்: ஆதித் தமிழர் பேரவையினர் 30 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் மறியலில் ஈடுபட்ட ஆதித் தமிழர் பேரவையினர் 30 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

     ஆதித் தமிழர் பேரவை வெளியிட்ட மதுரைவீரன் வரலாற்று நூலுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலர் பா.ஆதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திடீரென அப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். மதுரைவீரன் நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

     அதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரைப் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai