Enable Javscript for better performance
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 2478 பேருக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 2478 பேருக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சர் வழங்கினார்

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 2478 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திங்கள்கிழமை வழங்கினார்.

     மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற விழாவுக்கு மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 2478 மாணவர்களுக்கு ரூ.3.96 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

     அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் சீருடை முதல் மடிக்கணினி என 18 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிறப்பாக படித்தால் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம். நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.

     மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா:  மதுரை மாநகராட்சியில் 2011-12 ஆம் கல்வியாண்டில் 2418 மாணவர்களுக்கு ரூ.3.86 கோடி மதிப்பிலும், 2012-13 ஆம் கல்வியாண்டில் 2536 மாணவர்களுக்கு ரூ.4.05 கோடி மதிப்பிலும், 2013-14 ஆம் கல்வியாண்டில் 2487 மாணவர்களுக்கு ரூ.3.98 கோடி மதிப்பிலும், தற்போது 2478 மாணவர்களுக்கு ரூ.3.96 கோடி மதிப்பிலும் என மொத்தம் 9919 மாணவர்களுக்கு ரூ.15.86 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறந்த பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் சிபாரிசு செய்யப்பட்டது. இந்த கல்வியாண்டில் மாநகராட்சி மாணவர்களுக்கு அரசின் கலந்தாய்வு மூலம் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என்றார்.

     மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திரு.வி.க மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர் எம்மா ஆலிவ், மாநில இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஈ.வெ.ரா பள்ளி மாணவி ஐஸ்வர்யா, மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற ஈ.வெ.ரா பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி எஸ்.வசந்தவைஷ்ணவி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

     மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், ஆர்.அண்ணாதுரை, ஆர்.சுந்தர்ராஜன், துணை மேயர் கு.திரவியம், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) செ.சாந்தி, மாநகராட்சி கல்வி அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai