Enable Javscript for better performance
முப்பெரும் விழா பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி முருகன் கோயில் அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பி.கே.மூக்கையாத்தேவர் 36வது நினைவு நாள், பி.என்.வல்லரசு 16வது நினைவு நாள் மற்றும் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    பார்வர்டு பிளாக் மாவட்ட பொது செயலர் சி.சுகுமாறன் தலைமை வகித்தார். மதுரை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாண்டி, மாவட்ட அமைப்பு செயலர் ஐ.ராஜா, ஒன்றிய தலைவர் பரமத்தேவர், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆர்.கே.சாமி, டி.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  செல்லம்பட்டி ஒன்றியச் செயலர் ஏ.எஸ்.ரவி, உசிலம்பட்டி ஒன்றிய செயலர் எம்.மலைச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.பார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.வி.கதிரவன், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.  கூட்டத்தில் பார்வர்டு பிளாக் நகர செயலர் பாஸ்கரபாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் டி.ஆர்.பால்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai