Enable Javscript for better performance
மூன்று மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்குப் பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    மூன்று மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்குப் பயிற்சி

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்களர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மதுரையில் மண்டல அளவிலான பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

     தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிக்கான (2016) வரைவு பட்டியில் செப்.15 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சிக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம் செய்வது உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களைச் சேர்க்க படிவம் - 6 பெறும்போது பிறப்புச் சான்றிதழ் பெறுவது, வயதான வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் சமர்ப்பித்தால், ஏற்கெனவே இருந்த முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பெறுவது, இணையதளம் மூலமாக எவ்வாறு பெயர் சேர்ப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

     இதுகுறித்து சென்னையில் ஏற்கெனவே தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர் பதிவு  அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர்கள் ஜி.செந்தில்குமாரி (மதுரை), எம்.ராஜப்பா (உத்தமபாளையம்), தனித்துணை ஆட்சியர்கள் ஏ.லில்லிபாய் (மதுரை), எஸ்.சேதுராமன் (திண்டுக்கல்), கலால் பிரிவு உதவி ஆணையர் எஸ்.வி.குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 68 அலுவலர்கள் பயிற்சி பெற்றனர். ஆவின் பொது மேலாளர் ஏ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என்.ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai