Enable Javscript for better performance
மேலூரில் கால்நடைச் சந்தைக்கு மாடுகள் வரத்து திடீர் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேலூரில் கால்நடைச் சந்தைக்கு மாடுகள் வரத்து திடீர் அதிகரிப்பு

    By மேலூர்  |   Published on : 08th September 2015 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு கால்நடைகள் திடீரென அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.

     கடந்த சில வாரங்களாக கேரள மாட்டு வியாபாரிகள் வராததால் கால்நடைச் சந்தை முடங்கிப்போயிருந்தது. இந்நிலையில், இரண்டு வாரங்களாக கால்நடைச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது. கன்றுகள் மற்றும் பால்மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. கேரள வியாபாரிகள் மாடுகள், கன்றுகளை அதிக அளவில் கொள்முதல் செய்தனர். மேலூர் சுற்றுவட்டாரத்தில் பால் மாடுகள் வளர்ப்போர் அதிகம் உள்ளனர். கால்நடைகளுக்கான தீவனம் 25 சதவிகிதம் விலை அதிகரித்துவிட்டது. பெரியாறு-வைகை அணைகளில் போதிய நீர் தேங்காததும் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாடுகளை  இறைச்சி வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai