Enable Javscript for better performance
ரூ.6.60 லட்சம் வழிப்பறி வழக்கில் 3 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த ரூ.6.60 லட்சம் வழிப்பறி வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேரைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

     மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியில் மார்பிள் நிறுவனம் வைத்திருப்பவர் மணீஷ்குமார். இவரது வீடு கோமதிபுரம் சீமான் அவென்யூ பகுதியில் உள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் அங்கிட்குமார்ஜெயின் (30) கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ரூ.6.60 லட்சத்தை உரிமையாளரிடம் அளிக்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

     சீமான் அவென்யூ அருகே இரு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அங்கிட்குமார்ஜெயினை தாக்கி பணத்தைப் பறித்துச்சென்றனர். இதுகுறித்து அண்ணாநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

     விசாரணை அடிப்படையில் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராம்பாண்டி (32) மீது சந்தேகம் எழுந்தது. அதன்படி அவரைப்

    பிடித்தனர். நிறுவனத்தில் வேலை செய்தபோது இரவில் ராம்பாண்டிதான் பணத்தை உரிமையாளரிடம் கொடுக்கச்செல்வாராம். அவர் வாடிக்கையாளர்களிடம் கமிஷன் பெற்றது தொடர்பான பிரச்னையில்தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

     பணி நீக்கம் செய்த நிலையில், ராம்பாண்டி தனது சகோதரர் சரவணகுமார் (30), அவரது நண்பர் ரவிகுமார் (30) உள்பட 8 பேருடன் சேர்ந்து சம்பவத்தன்று பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

     ராம்பாண்டி அளித்த தகவலின் பேரில் ரூ.1.04 லட்சம் ரொக்கத்தை போலீஸார் மீட்டனர். மேலும், வழிப்பறியில் தொடர்புடைய சதாம் உசேன், அருண் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai