Enable Javscript for better performance
விலையில்லா மிக்ஸி கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி அருகே வலையபட்டியில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை உடனே வழங்கக்கோரி வில்லாணி பெருமாள்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

        போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு வலையபட்டியில் மூன்று தினங்களாக தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் வில்லாணி பெருமாள்பட்டியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்படவில்லையாம்.

      இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து மண்டல வட்டாட்சியர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பத்மநாபன், பால்பாண்டி, உசிலம்பட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

       அனைவருக்கும் விலையில்லா பொருள்கள் வந்துள்ளன. போதுமான இடம் இல்லாததால் மற்றொரு இடத்தில் வைத்துள்ளோம்.

      மாலைக்குள் கொடுத்து விடுவோம் என அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai