Enable Javscript for better performance
அனுமதியின்றி கிராவல்மண் அள்ளிய 6 லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி கிராவல்மண் அள்ளிய 6 லாரிகள் பறிமுதல்

    By மேலூர்  |   Published on : 09th September 2015 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் வட்டம் திருவாதவூர் அருகே அனுமதியின்றி குவாரியிலிருந்து கிராவல் மண் ஏற்றிவந்த 6 லாரிகளை மேலூர் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

     மேலூர் காவல் ஆய்வாளர் முத்து தலைமையில் போலீஸார் திருவாதவூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துசென்றனர். அப்போது கட்டையன்பட்டி அருகே குவாரியிலிருந்து கிராவல் மண் ஏற்றிவந்த 6 டிப்பர் லாரிகளை கைப்பற்றினர். குவாரி உரிமம் முடிந்தநிலையில், மண் அள்ளிவந்த லாரிகளுடன் ஜேசிபியையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai