Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

    By பேரையூர்  |   Published on : 09th September 2015 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரையூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டரை சாப்டூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

      மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாப்டூரை அடுத்துள்ள அணைக்கரைப்பட்டி பகுதியில் திருட்டு மணல் அள்ளப்படுவதாக சாப்டூர் காவல்துறையினருக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, சாப்டூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் காவல்துறையினர் அணைக்கரைப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியிலிருந்து  வந்த 2 டிப்பர் லாரி மற்றும் ஒரு டிராக்டரை சோதனை செய்தனர். அப் போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனை ஓட்டி வந்த பெரிய வண்டாரியைச் சேர்ந்த கணேசன், சிவசீனி, கருப்பசாமி ஆகியோர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

     இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஓட்டுநர்களை தேடிவருகின்றனர். அதனைத்தொடர்ந்து இரண்டு டிப்பர் லாரி மற்றும் ஒரு டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai