Enable Javscript for better performance
இயன்முறை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றத்தினர் (பிஸியோ தெரபிஸ்ட்) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     கடந்த 2007-இல் சட்டப்பேரவையில் மாநில சுகாதாரக் கோரிக்கையில் அறிவித்தபடி மாநில பிஸியோ தெரபி குழு அமைக்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிஸியோ தெரபி சிகிச்சை ஆரம்பிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இயன்முறை பெருமன்ற மாநிலத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டதில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai