Enable Javscript for better performance
இருதய நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அரிய சிகிச்சை அளித்த மதுரை அரசு மருத்துவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    இருதய நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அரிய சிகிச்சை அளித்த மதுரை அரசு மருத்துவர்கள்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இருதய ரத்தக்குழாய் பாதிப்புக்குள்ளாகி மூச்சுத்திணறலில் அவதியுற்ற கர்ப்பிணிக்கு அரிய சிகிச்சை மூலம் குணப்படுத்தி மதுரை அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

      விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி (24). கர்ப்பிணியான 4 மாதத்திலேயே வளர்மதி அடிக்கடி மயக்கமடைந்துள்ளார்.

     மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இருதய (வென்ட்ரிக்கிள்) வால்வு பகுதி 3.5செ.மீ. என்ற வழக்கத்துக்கு மாறாக 0.7 செ.மீ. அளவுக்கு சுருங்கியிருந்தது.

     இதனால் ரத்த ஓட்டம் தடைப்படும் மிட்ரல்ஸ்டெனோசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

      இப்பாதிப்புக்கு இருதய அறுவைச் சிகிச்சை அவசியம். ஆனால், கர்ப்பிணிக்கு  அறுவைச் சிகிச்சை சாத்தியமில்லை.  தாய், சேய் ஆகியோரை காப்பாற்றவேண்டிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் வளர்மதி சேர்க்கப்பட்டார். டீன் ரேவதிகயிலைராஜன் உத்தரவின் பேரில் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

      பிரசவ சிகிச்சைப் பிரிவு பேராசிரியை கே.எஸ்.சித்ரா, இருதய சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து வளர்மதியின் ரத்தக் குழாயை விரிவடைய வைக்க, ஆஞ்சியோ பலூன் சிகிச்சை அளித்தனர்.

      மெல்லிய கம்பி அமைப்பின் முனையில் பலூனை பொருத்தி அதை, தொடை நரம்பு வழியாக இருதய பகுதிக்கு அனுப்பினர்.

      பின் பலூனை ஊதி பெரிதாக்கி ரத்தக்குழாய் அளவை விரிவடையவைத்தனர்.

     இதனால் தற்போது ரத்த ஓட்டம் சீராகி வளர்மதிக்கு அறுவைச் சிகிச்சையின்றி குழந்தை பிறந்தது. இதுபோன்ற சிகிச்சை அளிப்பது மிகமிக அரிதானது என டீன் கூறினார்.

      தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு வளர்மதிக்கு மயக்கப் பிரச்னை ஏற்படாது. ஆனால், இரண்டாவது குழந்தை பெறும் போது அவர் தீவிர சிகிச்சைக்கு உள்படவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

      கர்ப்பிணிக்கு அரிய சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை டீன் ரேவதிகயிலைராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai