Enable Javscript for better performance
இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்க வர்த்தக சங்கம் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்க வர்த்தக சங்கம் வேண்டுகோள்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுடனான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தைச் சேர்க்க வேண்டும்

    என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

     இதுகுறித்து சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வேண்டுகோள்:

     சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிபெற, வர்த்தக சங்கம் வாழ்த்துகிறது. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முதலீடுகள் பெருகுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

     இலங்கை தவிர பிற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்படவில்லை. இதனால், பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க இயலவில்லை. மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தைச் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

     சர்வதேச சரக்குகளை கையாள ஏதுவாக சரக்கு விமான நிலையமாக 2013-லேயே அறிவிக்கப்பட்ட போதும், இதுவரை அதற்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சரக்குப் போக்குவரத்து தொடங்க முடியாத நிலை உள்ளது.

        இப்பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, திருச்சி, கோவை, சென்னை விமான நிலையங்கள் மூலமாக அதிக செலவுடன் ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது.

     மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் தடத்தில் கனரகத் தொழில்கள் அதிகளவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொழில்கள் வருவது நூற்றுக்கணக்கான உபதொழில்களுக்கு வழிவகுக்கும். சிறுதொழில்களுக்கான வழிகாட்டு மையம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai