Enable Javscript for better performance
கண்மாய்களில் மாநகராட்சி கழிவுநீர் கலப்பு:மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    கண்மாய்களில் மாநகராட்சி கழிவுநீர் கலப்பு:மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் 6 கண்மாய்களில் மாநகராட்சி கழிவு நீர் கலப்பதாகக் கூறப்படும் புகாருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

      மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த முருகலிங்கம் தாக்கல் செய்த மனு: மதுரையில் பெருங்குடி மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் அயன்பாப்பாகுடி, அய்யவைத்தான், கல்குளம், பெரியகுளம், தாவரம்பூ, கழுவன்குளம் கண்மாய்கள் உள்ளன. மதுரை மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மருத்துவமனைகளின் மருத்துவக்கழிவுகள், நூற்பாலை கழிவுகள் இக்கண்மாய்களில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசுபட்டு பயன்படுத்தமுடியாத நிலையில் மாறியுள்ளது. இந்த நீரைக்குடிக்கும் கால்நடைகள் உயிரிழக்கின்றன. கண்மாய்கள் மாசுபட்டு உள்ளதால் அதில் வளர்க்கப்படும் மீன்கள், கண்மாய்க் கரையில் வளர்க்கப்படும் புல் மற்றும் காய்கறிகள் தரமற்றவையாக உள்ளன. எனவே மேற்கண்ட 6 கண்மாய்களிலும் மீன் வளர்க்கவும் புல்வளர்ப்பு மற்றும் காய்கறி தோட்டம் அமைக்கவும் உரிமம் வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், விஎம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai