Enable Javscript for better performance
கனிமவள முறைகேடு: சட்ட ஆணையரிடம் புகார் அளித்தவர்கள் கவனத்துக்கு...- Dinamani

சுடச்சுட

    

    கனிமவள முறைகேடு: சட்ட ஆணையரிடம் புகார் அளித்தவர்கள் கவனத்துக்கு...

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கனிமவள முறைகேடு விசாரணைக்கான தனி அலுவலர் மற்றும் சட்ட ஆணையரிடம் மனு அளித்தவர்கள், தங்களது மனு மீதான நடவடிக்கை விவரத்தை சட்ட ஆணைய அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து சட்ட ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:

     மதுரை மாவட்டத்தில் கனிமவள முறைகேடு குறித்து 2014 டிசம்பர் 3 ஆம் தேதி முதல், தனி அலுவலர் மற்றும் சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆணையத்தின் பதவி காலம் முடியும் நிலையில் உள்ளதால், இதுவரை விவரம் கிடைக்கப் பெறாத மனுதாரர்கள் அவர்களது கோரிக்கை மனு குறித்து 3 நாள்களுக்குள் பூமாலை வணிக வளாகத்தில் உள்ள சட்ட ஆணையர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai