Enable Javscript for better performance
கூடைப் பந்து போட்டி: தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    கூடைப் பந்து போட்டி: தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலிடம்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கூடைப் பந்து போட்டியில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது.

     அண்ணா பல்கலைக் கழக மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப் பந்து போட்டி வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை வேலம்மாள் அறக்கட்டளை துணைத் தலைவர் கணேஷ் நடராஜன் மற்றும் வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் என்.சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன.

     இறுதிப் போட்டியில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலிடமும், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி இரண்டாம் இடமும், மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மூன்றாமிடமும் பெற்றன. சாம்பியன் பட்டம் வென்ற அணியினருக்கு வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் என்.சுரேஷ்குமார் கோப்பையை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் எம்.பொன்குமார் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai