Enable Javscript for better performance
சர்வதேச அளவில் கடிதம் எழுதும் போட்டி: மதுரை பள்ளி மாணவர் மூன்றாமிடம்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச அளவில் கடிதம் எழுதும் போட்டி: மதுரை பள்ளி மாணவர் மூன்றாமிடம்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மதுரை டி.வி.எஸ். லட்சுமி பள்ளி மாணவர் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

      பள்ளி மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உலக அஞ்சல் ஒன்றியம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெறும். நடப்பாண்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், மதுரை டி.வி.எஸ் லட்சுமி பள்ளியின் பதினோறாம் வகுப்பு மாணவர் சௌரேஷ் நாமகிரி மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

      இதற்கான பாராட்டு விழா மதுரை ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாணவருக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிய தென் மண்டல அஞ்சல் சேவைகளின் இயக்குநர் டி.நிர்மலா தேவி கூறியதாவது:

      தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காரணத்தால் கடிதம் எழுதும் பழக்கத்தை பெரும்பாலானோர் கைவிட்டுள்ளனர். தொடர்ந்து கடிதங்கள் எழுதும்போது எழுதுபவரின் கையெழுத்து, இலக்கணம், மொழித்திறன், எழுத்துத்திறன் உள்ளிட்டவை தானாக மெருகேறும். பள்ளி மாணவர்களை கடிதங்கள் எழுதுவதற்கு ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கடிதம் எழுதும் போட்டிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதால் மாணவர்களின் கலை அறிவு வளர்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். அஞ்சல்தலைகள் சேகரிக்கும் பழக்கங்களை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அஞ்சல்தலைகளின் பின்னால் மிகப்பெரிய வரலாறு உண்டு. அஞ்சல்தலைகளை சேகரிப்பதன் மூலம் வரலாறுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றார்.

     அஞ்சல்நிலைய வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நினைவு அஞ்சல்தலைகள் கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது. மாதம் ஒரு தலைப்பில் நினைவு அஞ்சல்தலைகளின் கண்காட்சி நடைபெறும். இதை காணவரும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் நிலையத்தின் சேவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

     முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.கணபதி சுவாமிநாதன், முதுநிலை அஞ்சல் அதிகாரி என்.பிரகாஷ். துணை அஞ்சல் அதிகாரி செந்தில்ராஜன், டி.வி.எஸ் லட்சுமி பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai