Enable Javscript for better performance
சுகாதார விழிப்புணர்வுக்காக வீதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்தார் மேயர்- Dinamani

சுடச்சுட

    

    சுகாதார விழிப்புணர்வுக்காக வீதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்தார் மேயர்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாசி வீதிகளில் சுகாதார விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மேயர் வி.ராஜன்செல்லப்பா செவ்வாய்க்கிழமை விநியோகித்தார்.

     மதுரை மாநகராட்சி சார்பில் மாசி வீதிகளில் தீவிர துப்புரவுப் பணியை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்து கூறியதாவது: மாசி வீதிகளில் இரவில் சேரும் குப்பைகளை அகற்ற தீவிர துப்புரவுப் பணி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

     திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தினமும் 400 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது 600 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் இரவிலும் பேருந்து நிலையம், மாசி வீதிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

     மாநகராட்சி குப்பைக் கிடங்குகளில் உரம், எரிவாயு, மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரமாக திகழ வணிகர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

          பின்னர் அவர் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற துண்டுப் பிரசுரங்களை கடைகளில் விநியோகித்தார். இதில் மாநகராட்சி ஆணையர் பொறுப்பு செ.சாந்தி, துணைமேயர் கு.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai