Enable Javscript for better performance
சேதுமன்னர்களின் தமிழ்ப்பணி நூல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    சேதுமன்னர்களின் தமிழ்ப்பணி என்ற நூல் மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

     மதுரைத் தமிழ்சங்கத்தின் 115 ஆம் ஆண்டு விழா, சேது மன்னர்களின் தமிழ்ப்பணி-நூல் வெளியீட்டு விழா, ஆசிரியர் தின விழா ஆகிய முப்பெரும் விழா செந்தமிழ்க் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் ந.சேதுராமன் நூலை வெளியிட்டார். அதன் முதல்பிரதியை தமிழக வேளாண்துறை இயக்குநர் எம்.இராசேந்திரன் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். 

     சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் நூல் மதிப்புரையாற்றினார். நூலாசிரியரான செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் செ.கந்தசாமி ஏற்புரையாற்றினார்.  முன்னதாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள், இன்னாள் ஆசிரியர்களை மாணவர்கள் கெளரவித்தனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் வி.கிளாட்சன் ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசினார்.

     நிகழ்ச்சியில், மதுரை தமிழ்ச்சங்கச் செயலர் ச.மாரியப்ப முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சு.விஜயன் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் கி.வேணுகா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai