Enable Javscript for better performance
தி.மு.க. தெருமுனை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருமங்கலம் பகுதியில் செப்டம்பர் 25ஆம் தேதி மேற்கொள்ளவுள்ள நமக்குநாமே திட்டம் குறித்து விளக்குவதற்காக திருமங்கலம் ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம் திங்கள்கிழமை நடந்தது.

     இந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலர் எம்.மணிமாறன் தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலர் பாலாஜி, ஒன்றிய செயலர் கொ.தனபாண்டியன் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக பேச்சாளர் ஆரணி.மாலா பேசினார். திருமங்கலம் ஒன்றியத்தில் செக்காணூரணி, கரடிக்கல், கீழஉரப்பனூர், தங்களாச்சேரி, பி.அம்மாபட்டி, சாத்தங்குடி ஆகிய இடங்களில் பிரசாரம் நடந்தது. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் கா.முருகன், ரெகுபதி கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai