Enable Javscript for better performance
தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அடையாள அட்டைக்கான (ஆதார்) சிறப்பு முகாம்கள் மதுரை மாநகராட்சியில் புதன்கிழமை (ஆக.9) முதல் நடைபெறுகிறது.

     இதுகுறித்து மாநகராட்சி பொறுப்பு ஆணையர் செ.சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

     மதுரை மாநகராட்சியில் புதன்கிழமை முதல் வரும் 14-ம் தேதி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான கைரேகை, கருவிழிப் புகைப்படம் பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது.

     மண்டலம் எண் 1 (ரயில்வே மேற்கு நுழைவு வாயில் எதிரில்) வளாகத்தில் எல்லீஸ்நகர் (வார்டு 17) பகுதிக்கும், மண்டலம் எண் 2 (ரேஸ்கோர்ஸ் சாலை இ.பி. அலுவலகம் அருகே) வளாகத்தில் சொக்கிகுளம், தல்லாகுளம் (வார்டு 42, 43), மண்டலம் எண் 3 (முனிச்சாலை சந்திப்பு பகுதி) வளாகத்தில் செயிண்ட் மேரீஸ், காமராஜர்புரம் (வார்டு 69, 70) ஆகிய பகுதிகளுக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

     மண்டலம் எண் 4 (மேலமாரட் வீதி) வளாகத்தில் வடக்கு கிருஷ்ணன் கோவில், மீனாட்சியம்மன் கோவில், ஜடாமுனி கோவில், காஜிமார் தெரு (வார்டுகள் 83, 84, 85, 86) சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

     மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வார்டுகள் 1, 2, 3, 4 மற்றும் ஆனையூர் (வார்டு 23)  பகுதிகளுக்கு ஆனையூர் வார்டு அலுவலகத்திலும், திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர் (வார்டுகள் 95, 96, 97, 98 மற்றும் 99) ஆகியவற்றுக்கு திருப்பரங்குன்றம் வார்டு அலுவலகத்திலும், அவனியாபுரம் (வார்டுகள் 59,60, 61, 62 மற்றும் 94) ஆகியவற்றுக்கு அவனியாபுரம் நகராட்சி அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai