Enable Javscript for better performance
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பாராட்டினார்.

     மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா, அண்ணா நகர் ராஜ பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஜோசபின் செல்வமேரி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதையும், 17 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளனர்.

     இவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டிய ஆட்சியர் சுப்பிரமணியன் பேசியது:

        விருது பெற்ற ஆசிரியர்கள் இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். ஏனெனில், ஒருவர் உயர்ந்த நிலைக்குச் செல்லும்போது சமூகத்தின் பார்வை மேலும் அவரை உன்னிப்பாகக் கவனிக்கும். ஆகவே, பொறுப்புகளும் - கடமைகளும் அதிகரித்து உள்ளன.

      கடவுளுக்கு நிகரானவர்கள் ஆசிரியர்கள் என்பதை மனதில் கொண்டு சிறப்பாகப் பணிபுரிய வேண்டும். மாநில விருது பெற்றவர்கள், தேசிய விருதைப் பெறுவதற்கும், தேசிய விருது பெற்றவர்கள் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியர்களாகச் செயல்படுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

              முதன்மைக் கல்வி அலுவலர் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் கோவிந்தராஜ், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி (மதுரை), லோகநாதன் (மேலூர்), ராமகிருஷ்ணன் (உசிலம்பட்டி) ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai