Enable Javscript for better performance
பயன்பாடற்ற சுகாதார வளாகம், சேதமடைந்த குடிநீர்த் தொட்டியை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பயன்பாடற்ற சுகாதார வளாகம், சேதமடைந்த குடிநீர்த் தொட்டியை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொட்டாம்பட்டி ஒன்றியம் சேக்கிபட்டியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், சேதமடைந்த குடிநீர்த் தொட்டியைச் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

     கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். மேலவளவு மற்றும் சேக்கிபட்டி ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம், அங்கன்வாடி கட்டடம், பசுமை வீடுகள், சாலை பணிகள், தனிநபர் இல்லக் கழிப்பறை உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

     சேக்கிபட்டியில் பயன்பாடு இல்லாமல் விடப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைத்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். குன்னாரம்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் மேல்நிலை குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியர், அதற்குப் பதிலாக புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு கருத்துரு அனுப்ப உத்தரவிட்டார். முன்னதாக மேலவளவு கிராமத்தில் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 10 சென்ட் நிலத்தை ஆய்வு செய்தார்.

     ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பி.செல்வராஜ், மேலூர் வட்டாட்சியர் எஸ்.கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.வெற்றிவேல், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வி.மலைச்சாமி (சேக்கிபட்டி), வி.என்.விஜயராகவன் (மேலவளவு) உள்ளிட்டோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai