Enable Javscript for better performance
பால்விலை உயர்வுக்கு போராட்டம்: கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    பால்விலை உயர்வுக்கு போராட்டம்: கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடி

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பால்விலை உயர்வுக்கு எதிராகப் போராடிய திமுக உள்ளிட்ட 3 கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

      வழக்குரைஞர் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.  மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய மழை இல்லை. இதனால் விவசாயிகள் பலரும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஆவின் பால்கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் அரசு பால் கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய்யும் பாலின் விலையை அரசு உயர்த்தியது. இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பால் விலையும் உயர்ந்தது. விவசாயிகளின் நலன் கருதி பால்விலையை அரசு உயர்த்தியது. ஆனால், திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் பால்விலை உயர்வை எதிர்த்துப் போராடின. இது விவசாயிகளின் தொழில் செய்யும் உரிமைக்கு எதிரானது என்பதால் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக, தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

      இம்மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai